சர்வதேச இலக்கிய விருதிற்கு கவிஞர் இப்னு அசுமத் தெரிவு – அமைச்சர் டக்ளஸ் கௌரவிப்பு!

Tuesday, January 4th, 2022

சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இலக்கிய விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கவிஞர் இப்னு அசுமத் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இந்நிகழ்வில் இன்று(04.01.2022) நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக மொழிபெயர்ப்பாளரும், மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான ரீ. எம் பாரூக் அஸீஸ், இப்னு அசுமத் என்னும் புனைபெயரில்  பிறமொழிக் கவிதைகள், கதைகள் சிறுகதைகள் என்பவற்றை மொழிபெயர்ப்பு செய்து  இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

இதன்காரணமாக, எதிர் பிரதிகள் இலக்கிய செயற்பாட்டு அமைப்பினால் சிறந்த மொழிபெயர்ப்புக்கான 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இலக்கிய விருதிற்கு தெரிவு செய்து கௌரவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 22 ஆண்டுகளாக தன்னுடன்  பணியாற்றி வருகின்றவரும், கலைச் செல்வன் என வாஞ்சையுடன் தன்னால் அழைக்கப்படுபவருமான கவிஞர் இப்னு அசுமத் அவர்களை இன்று பாராட்டிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: