கிளிநொச்சியில் அமையும் சர்வதேச தரமான விளையாட்டு அரங்கம் எமது இளைஞர்  யுவதிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017

தேசிய ரீதியாக விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய கட்டமைப்புக்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியாகவும் ஊக்கப்படுத்த வேண்டியது முக்கியமானதொன்றாகும். இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழுகின்ற அனைத்து இளைஞர்களையும் யுவதிகளையும் சகலதுறை விளையாட்டு வீரர்களாக பயிற்றுவிப்பதற்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்புக்களும் ஏற்படுத்தப்பட வேண்டும்  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுகத தாச தேசிய விளையாட்டுக்கள் கட்டிடத் தொகுதி அதிகார சபைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ’வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இச்சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள துரையப்பா விளையாட்டரங்கினைப் பற்றியும் பேச விரும்புகின்றேன். 2015 ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களும், இந்தியப் பிரதமர் மோடி அவர்களும் துரையப்பா விளையாட்டு அரங்கை புனரமைப்பதற்காக இந்திய அரசு 145 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைத்தார்கள்.

அதேவேளை யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கானது, மேலும் பல்வேறு விளையாட்டுக்களுக்கான கட்டமைப்புக்களையும், வசதிகளையும் ஏற்படுத்தி, சுகத தாச விளையாட்டு அரங்கிற்கு நிகராக வடக்கில் துரையப்பா விளையாட்டு அரங்கம் மேம்பாடு செய்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இன்நோக்கத்தை அடைவதற்காக யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கிற்காகவும் ஒரு அதிகார சபையை அமைத்து அதை அபிவிருத்தி செய்யுமாறு கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சரை மிகவும் வினையமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச தரத்திலான கிளிநொச்சி விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்காக முன்னைய அரசாங்கத்தினால் 325 மில்லியன் ரூபா நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் ஆரம்பிக்கப்ட்டது. 2015ஆம் ஆண்டு நிறைவடையுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இச்செயற்றிட்டம் இன்னும் துரதிஸ்டவசமாக பூரணப்படுத்தப்படவில்லை. இச் செயற்திட்டம் திட்டமிட்டபடி பூரணப்படுத்தப்பட்டிருந்தால், வடக்கின் இளைஞர்களும், யுவதிகளும், தமது விளையாட்டுத் திறமைகளை மேலும் வளர்த்தெடுத்திருப்பார்கள்.

வடக்கிலுள்ள இளைஞர்களும், யுவதிகளும், புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களும் சமூகத்திற்கு பயன்பாடுள்ள செயற்றிட்டங்களிலும், வணிக மற்றும் தொழில் முயற்சிகளிலும் விளையாட்டுத்துறையிலும் ஈடுபடுவதற்கு உரிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட வெண்டும். இந்த உயரிய நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அரசாங்கமும் விளையாட்டுத்துறை அமைச்சரும் ஆதரவு நல்க வேண்டும்.

Related posts:


தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுப்பில் வைத்திருக்க உத்தேசமா? -  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
நிலையற்ற அரசியல் கொள்கையே நிடிக்கிறது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயல...