செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!
Saturday, January 21st, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்துள்ளார்.
குறித்த 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 402 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 453 வேட்பாளர்கள் இம்முறை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையின் படி 60 வீத உறுப்பினர்கள் வட்டாரங்களில் நேரடியாகவும் 40 வீதமானோர் விகிதாசார முறைமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஈ.பி.டி.பி. கட்சி வீணை சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 21.01.2023
Related posts:
வடபகுதி முகம்கொடுக்கும் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
நிறுவனமும் சூழலும் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் - குருநகர் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைச்...
சிலாபம் களப்பினால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தலுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
|


