சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் – அமைச்சர் டக்ளஸினால் வழங்கி வைப்பு!

சுகாதார வசதிக் குறைபாடுடைய கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் குறித்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கடற்றொழிலாளர்களின்சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கோடு கடற்றொழில் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது பயனாளிகளுக்கு முதற் கட்டமாக குறி்த்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முற்பணமாக ஆயரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மிகுதித் தொகை விரைவில் வழங்கி வைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 26.12.2020
Related posts:
கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணை பிரச்சினைக்கு நாளை தீர்க்கமான முடிவு - இன்றைய அமைச்சரவையில் தீர்மானம்!
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் முறைப்பாடு - கட்டுப்படுத்த பளை பகுதியில் அமைச்சர் டக்ளஸ் ஆரய்வு!
யாழ் மாவட்டத்தின் கிராம அலுவலகளுடன் அமைச்சர் டக்ளஸ் அவசர கலந்துரையாடல்!
|
|
எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் - கிளிநொச்ச...
வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிற...
அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை - பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்ற...