கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணை பிரச்சினைக்கு நாளை தீர்க்கமான முடிவு – இன்றைய அமைச்சரவையில் தீர்மானம்!

Monday, August 8th, 2022


~~~~

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு இன்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணை தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்களை இன்று இடம்பெற்ற அமைச்சரவையில் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை நியாயமான விலையில் எப்படியாயினும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் மண்ணெண்ணையை இறக்குமதி செய்வதில் காணப்படும் சவால்களையும் தெளிவுபடுத்தினார்.

இதனையடுத்து, ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகிய மூவரும் நாளை சந்தித்து கலந்துரையாடி, குறித்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.- 08.08.2022

Related posts:

யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வுகள் இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்த...
மீண்டும் மக்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முடியாது : மல்லாவி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை...
நிந்தவூர் பிரதேசத்திற்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை - அமைச்சர் டக...