சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு – நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, November 24th, 2023

யாழ்ப்பாணம் – சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு அது தொடர்பில் நிச்சயம் வெளிக்கொண்டுவர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் (23)  இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் களவு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழந்துள்ளதாக பரவலாக யாழ் மாவட்டத்தில் பேசப்பட்டு வந்தது.

வைத்திய அறிக்கையிலும் தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகின்றது. இரண்டு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

இருந்தாலும் இது தொடர்பில் ஒரு நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு அது தொடர்பில் நிச்சயம் வெளிக்கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்மை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
இரணைதீவில் பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் - அமைச்சர் டக்ளஸின் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்!
யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...