யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை – ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, December 5th, 2021

நீர்கொழும்பு, துங்கல்பிட்டியவில் தனியார் முதலீட்டாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வரும் படகு கட்டும் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ்ப்பாணத்திலும் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் முதலீட்டாளர்களினால் வெளிப்படுத்தப்பட்ட ஆர்வத்தினை வரவேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நோர்வே முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வருகின்ற குறித்த படகு கட்டும் தொழிற்சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர், தொழிற்சாலையின் உற்பத்திகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும், எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்ததுடன், இம்மாத இறுதியில் விரிவான கலந்துரையாடலை நடத்தி அனைத்து விடயங்களும் ஆராயப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது - ட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்கள் விஷேட கலந்துரையாடல...
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களு...