ஜனாதிபதி ரணிலின் வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 19th, 2024

ரணிலினுடைய வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்  மாவட்ட செயலகத்தில் தொழில் முயற்சியாளர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நேற்றையதினம் (18.01.2024) கேட்டறிந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடமாகாணத்தில் இருக்க கூடிய தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுவதுதான் இதன் நோக்கம்.

ஜனாதிபதி வடக்கு மாகாணத்தில் வந்திருந்த நேரத்தில் இங்கு பலதரப்பட்டவர்களை அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் எல்லோருடனும் அவர்கள் எதிர்பாராதமாதிரி அவரால் சந்திக்க முடியவில்லை என்றாலும் அவரினுடைய சந்திப்பில் இங்கே இருக்க கூடிய பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பில் அவர் தெளிவாக, விளக்கமாக புரிந்துகொண்டார்.

இதற்கு முன்னரும் அவர் பல சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பயணம் தனக்கு திருப்திகரமாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க கோரிக்கைகளை  தன்னுடைய கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சொல்லியிருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
இன சமத்துவத்தை வலுப்டுத்த  இளைஞர், யுவதிகளுக்கு வழி காட்டினோம் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கிற்கு மறுக்கப்பட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளமை இணக்க அரசியலுக்கான இன்னுமொரு வெற்றி – அமைச்சர் ட...

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – டக்ளஸ் எம்.பி. குற்றச்சாட்ட...
இளைய தலைமுறையி்ன் மனமாற்றத்துடனான வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது -நானாட்டான் பிரதேச மக்கள் சந்திப்பில...
ஈ.பி.டி.பி மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !