இன சமத்துவத்தை வலுப்டுத்த  இளைஞர், யுவதிகளுக்கு வழி காட்டினோம் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017

1999 ம் ஆண்டின் 17 ம் இலக்க சுகத தாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத் தொகுதி அதிகாரசபை சட்டத்தினைத் திருத்துவதற்காக ஏறத்தாள 18 வருடங்களின் பின்னர் இச்சபையில் சமர்ப்பிக்கப்படுவது பாராட்டப் படவேண்டிய விடயம் ஆகும்  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுகத தாச தேசிய விளையாட்டுக்கள் கட்டிடத் தொகுதி அதிகார சபைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ’வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சுகத தாச தேசிய விளையாட்டு கட்டிடத் தொகுதியானது,  மறைந்த ஜனாதிபதி பிறேமதாசா அவர்களின் காலத்தில் மீள் நிர்மாணிக்கப்பட்ட பிறகே தேசிய ரீதியாக விளையாட்டுத்துறையில் ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டது. விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக மறைந்த ஜனாதிபதி பிறேமதாசா அவர்களின் வழிகாட்டலை இச்சந்தர்ப்பத்தில் இங்கு நினைவு கூருவது பொருத்தமானதாகும்.

விளையாட்டுத்துறையின் பங்களிப்பு பல்துறை சார்ந்ததாகும். விளையாட்டின் மூலம் உடல் உள ஆரோக்கியமான இளைஞர் யுவதிகளையும், ஏனையோரையும் உருவாக்க முடியும். இதுமட்டுமல்லாமல் வெற்றி, தோல்விகளை வைராக்கிய உணர்வோடு அன்றி நல்ல உளப்பண்புகளுடன் சமமாக மதிக்கின்ற விழுமியங்களை இளைஞர், யுவதிகளுடைய உள்ளத்தில் விதைக்க வழி வகுக்கின்றது. தவிரவும் பல்லினச் சமூதாயம் வாழ்கின்ற நமது நாட்டில் விளையாட்டின் மூலம் சமூக இணக்கப்பாட்டையும், சமாதானத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

யுத்தகாலத்தின் போதுகூட  நாங்கள் வடக்கிலும் தெற்கிலும் இன உறவை ஏற்படுத்துவதற்கா தேசிய மட்டத்திலான விளையாடடுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக வடக்கிலுள்ள விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் கடல்மார்க்கமாக கப்பலில் அழைத்துவந்து பங்குபற்ற செய்தோம். இதனூடாக தேசிய நல்லிணக்கத்திற்கான பாதைகளையும் கதவுகளையும் நாமே திறந்துவைத்தோம். யுத்த அழுத்தத்தில் மூழ்கிக் கிடந்த எங்களது இளைஞர், யுவதிகள் அந்த அழுத்தத்தில் இருந்து விடுவித்து, தென் இலங்கை மக்களுடன் சமத்துவ உறவுகளை வலுப்படுத்தக் கூடியதாக வழிகாட்டினோம்.

ஆனால் இன்று வட மாகாணத்தில் நடப்பது என்ன? அங்கு முறையான விளையாட்டுப் பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கோ அதற்கான மூலவளங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ பொறுத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய தலைமைத்துவம் இல்லாத நிலையே காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை வளர்த்தெடுக்கும் முயற்சியானது, அக்கறையும், ஆற்றலும் இல்லாதவர்களின் அசமந்தப் போக்கினால் முடங்கிப் போய்க்கொண்டிருக்கிறது.

Related posts: