சமாதானத்தை விரோதிப்பவர்கள் சாத்தான்களே – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 31st, 2016

தமிழ் மக்களின் உரிமை என்னும் பெயரால் வேதமோதுகின்ற சாத்தான்கள் எமது  தேசத்தில் தொடர்ந்தும் சுயநல அரசியலை மேற்கொண்டுவருவதனால்தான் எமது மக்கள் இன்னமும் ஒரு நிம்மதியான வாழ்வியலையும் இறையாண்மையுடன் கூடிய தேசிய உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கோப்பாய் பிரதேச கட்சி அலுவலகத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச நிர்வாக செயலாளர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களுடனான விஷேட கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

DSCF0481

மேலும் அவர் உரையாற்றுகையில் –

தமிழ் மக்கள் முன்னெடுத்துச் சென்ற  இனவிடுதலை போராட்டத்தின் இலக்கை தமது சுயநல தேவைகளுக்காக மாற்றி அதனூடாக சகோதர படுகொலைகளுக்கு தூபமிட்டடு ஒன்றுபட்டு இருந்த எமது இன விடுதலை போராளிகளை பாதைமாறவைத்து தமது சுயநல அரசியலில் வெற்றிகண்டவர்கள் தொடர்ந்தும் எமது உரிமைப்போராட்டத்தை வைத்து தமது தேவைகளுக்காக எமது மக்களுக்கு இடம் பெயர்வுகளையும் உயிர் உடமை அழிவுகளையும் பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாது எமது இனத்தின் உரிமைகளையும் வரலாற்று வாழ்விடங்களையும் இழக்கச் செய்துள்ளனர்.

DSCF0494

அதுமட்டுமல்லாது ஆயுதப் போரட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் மக்களது அபிலாசைகளை தாமே வென்றெடுத்துத் தருவோம் என கூறி மக்களது ஒருமித்த வாக்குகளையும் அபகரித்து மத்திய அரசுடன் ஒட்டி உறவாடி தமக்கான பதவிகளையும் ஆடம்பர வாழ்வுகளையும் பெற்று தமிழ் மக்களது முதகிலேறி நின்று மீண்டும் தமிழ் மக்கள் உரிமைகள் தொடர்பில் ஊடகங்களின் செய்திகளுக்காக தேசியம் பேசுகின்றனர். இவைதான் இதர தமிழ் தரப்பினர் இன்றுவரை மேற்கொண்டுவரும் தேசியத்தின் வெளிப்பாடுகளாகும்.

DSCF0514

ஆனால் எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சியானது எமது இனத்தினது உரிமைசார் விடயங்களிலும் அபிவிருத்தியிலும் அக்கறையுடனும் ஆற்றலுடனும் செயற்பட்டு வருவதுடன் அதனை முன்னகர்த்திச் செல்ல வல்லமைகொண்ட உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் தான் எமக்கு மக்கள் கொடுத்துவரும் அரசியல் அதிகாரங்களை கொண்டு இன்றுவரை  மக்கள் மத்தியில் தனி ஒரு கட்சியாக நின்று பெரும்பணிகளை செய்யமுடிந்துள்ளது.

ஒன்றுபட்ட இலங்கை தேசத்தில் இன ஒற்றுமையுடன் கூடிய மக்கள் கூட்டமாக சம உரிமைகளுடன் எமது இனமும் வாழவேண்டும் என்பதற்காகவே நாம் ஜனநாயக அரசியல் பாதையில் எமது அரசியல் பயணத்தை முன்னகர்த்தி  எமது மக்களுக்கான பணிகளை மேற்கொண்டு வெற்றிகண்டுள்ளோம்.

DSCF0523

எமது இணக்க அரசியலூடான பாதையில் தென்னிலங்கை மக்களது மனங்களையும் நாம் வெற்றி கொண்டுள்ளோம் என்பதனால்தான் நாம் வழிநடத்திச் செல்லும் ஆற்றல் மிக்க அரசியல் பாதையையும் இன்று வெற்றிகண்டுள்ளது.

தற்போது நாம் எமது கட்சியை முழுமையான மக்கள் மயப்படுதப்பட்ட கட்சியாக மாற்றியமைப்பதிலும் வெற்றிகண்டுள்ளோம். தற்போது நாம் உருவாக்கியுள்ள கட்டமைப்பானது ஒவ்வொரு கிராமத்திலும் எமது சேவைகளை முழுமையடையச் செய்துள்ளதுடன் நாம் முன்னெடுத்துச் செல்லும் நகர்வுகளை மக்களிடம் எடுத்தச் செல்லும் மிகப்பெரும் ஊடகமாகவும் அதை உருவாக்கி வெற்றிகண்டுள்ளோம்.

எனவே கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட பணிகளையும் அதனூடாக நாம் முன்னெடுத்துச் சென்ற அரசியல் கொள்கைகளின் உண்மைத்தன்மையையும் உணர்ந்து அதனை ஏற்றுக்கொண்டு மக்கள் முழுமையாக இன்று எம்முடன் கரம் கோர்த்துள்ளனர்.

DSCF0484

வரவுள்ள தேர்தல்களில் எமது கரங்களுக்கு தமிழ் மக்கள் தமது ஒருமித்த பலத்தை கொடுக்கும் பட்சத்தில் இன்றுவரை தமிழ் மக்கள் சிந்திவரும் கண்ணீருக்கும் அவல வாழ்வுகளுக்கும் நிறுத்தல் புள்ளி வைத்து எமது இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதுடன் வசந்தமான வாழ்வையும் உருவாக்கி  கொடுப்போம் என தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன், கட்சியின் வலி கிழக்கு பிரதேச நிர்வாக உதவி செயலாளர் சந்திரபோஸ் உள்ளிட்டோருடன் குறித்த பிரதேசத்தின் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

Related posts:

முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
மலர்ந்தது தமிழர் ஆட்சி  என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது - டக்ளஸ் தே...
வடக்கு - கிழக்கில் போதுமான தாதியர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!