கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடு வகுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, February 8th, 2017

வடக்கில் கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடொன்று வகுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் காணி (பாரதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

இது தோடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு சில பக்தர்களால் கோவில்களுக்கென எழுதிக் கொடுக்கப்பட்ட காணிகள் பெரும் அளவில் காணப்படும் நிலையில், வடக்கில் மக்களது காணியற்றப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அந்தக் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அதற்குரிய பெறுமானத்தை குறிப்பிட்ட கோவில்களுக்கு வருமானம் என்ற வகையில் வழங்குவதற்கும், அக் காணிகளில் அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டங்களை அமைப்பதற்கு ஏதுவாக, அக் காணிகளுக்கு சட்ட ரீதியான உறுதி அல்லது அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கும் ஒரு விசேட ஏற்பாடொன்றை வகுக்குமாறும்,  அரச காணி அளிப்புகளின் உரித்தை இரத்த உறவினருக்கு கைமாற்றல் செய்கின்றபோது, பால் சமத்துவத்தைப் பேணும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Untitled-1 copy

Related posts: