பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிசாருக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த பிரதேச செயலர்கள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள் பல இடங்களில் பொலிஸ் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எனக்கு கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை விடுத்தால் தான் அதனை ஜனாதிபதியுடன் கதைத்து பொலிஸ் ஆளணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் பிரதேச செயலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கல்வி, சுகாதாரம், காலச்சா ரங்களை பாதுகாத்து வளர்த்தெ டுப்பதில் ஒவ்வொ ருவரும் அதிக அக்கறை செலுத்தவேண்...
சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
அமைச்சர் டக்ளஸ் காத்திரமான நடவடிக்கை - வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்ப...

வடக்கு மாகாண சபையில் ஊழல் : வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் மக்கள் -டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்...
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கல...
சவால்களை எதிர்கொள்ளும் யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை - துறைசார் வல்லுனர்களுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய...