அமைச்சர் டக்ளஸ் காத்திரமான நடவடிக்கை – வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்பாட்டுக்குள் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் தெரிவிப்பு!

Friday, May 5th, 2023

கடற்றொழில் அமைச்சரின் காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் குறித்த சட்டவிரோத தொழில்முறையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான இன்றைய கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே சக்கோட்டை மற்றும் இன்பசிட்டி கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தாங்கள் எதிர்கொள்ளும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாகவும், தாங்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்’தக்கது.

000

Related posts:

தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை உறங்கப்போவதில்லை - டக்ளஸ் தேவானந்தா!
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களையும் சுமக்க வேண்டும் - அமைச்சர் டக்...
கிளிநொச்சியில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ...