நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களையும் சுமக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, August 27th, 2020

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

குறிப்பாக நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களை சுமக்க வேண்டியிருக்கின்றது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஓர் அழைப்பினை விடுத்திருந்தேன். அதாவது இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன்.

எமது புலம்பெயர் உறவுகள் இந்த நாட்டிலே பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆவலாக இருக்கிறார்கள். எனினும் கடந்த காலங்களில் அவர்கள் முதலீடு செய்வதற்காக இந்த நாட்டுக்கு வருகை தந்திருந்தபோது அவர்களிடம் ஒரு சில தரப்புகளினால் கையூட்டங்கள் கோரப்பட்டதால் அந்த புலம்பெயர் உறவுகள் இந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளாமல் திரும்பிச்சென்ற நிலைமைகள் உண்டு.

ஆனால் தற்போதைய இந்த அரசாங்கத்தில் அத்தகைய முறைகேடுகள் இடம்பெறாது என்ற எனது நம்பிக்கையை நான் புலம்பெயர் உறவுகளுக்கு எடுத்துக் கூறி எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

வெளிநாடுகளில் பல வருட காலமாக வாழ்ந்து வருகின்ற நிலையில் பல்வேறு மாற்று அனுபவங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவாற்றல்களுடன் இத்தகைய புலம்பெயர் உறவுகள் எமது நாட்டிலே முதலீடுகளை மேற்கொள்கின்றபோது சர்வதேசத்துடன் போட்டி போடக் கூடிய பல்துறை உற்பத்திகளை இந்த நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மலைய மக்களின் உரிமைக்காகவும் நாம் போராடினோம்  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ச...
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...