கிளிநொச்சியில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 17th, 2022

கிளிநொச்சி, பரமன்கிராய் பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் நண்டு மற்றும் இறால் பண்ணைகளை அமைப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக ஆராய்ந்தார். –
இதனிடையே
கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு கலந்துரையாடல் பூநகரி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், பூநகரி பிரதேச செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன்போது, மண்ணெண்ணை தட்டுப்பாடு, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல், உள்ளூர் இழுவைப் படகுகள் உட்பட பல்வேறு விடயங்கள் இக்கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதனிடையே
புதிதாக கிளிநொச்சி மாவட்டதில் உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு கல்வி  வலயத்தினை சேர்ந்த கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில், குறித்த  வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்களை சந்தித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்...
வடக்கின் பாரிய நிதி மோசடிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது "சப்றா" நிறுவனமே - நாடாளுமன்றில...
சுயலாபம் அற்று சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துங்கள்- தமிழ் தரப்புக்களுக்கு அமைச்சர் ...