மீண்டெழும் நம்பிக்கையுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Sunday, October 23rd, 2022

பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சூழலிலும் மீண்டெழும் நம்பிக்கையுடன் தீபாவளித் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

“வளர்ந்து வரும் சிறிய நாடாகிய எமது தாய் நாட்டின் பொருளாதார பின்னடைவு, பெரும் முடக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று மற்றும் உலக நாடுகளுக்கு இடையேயான மோதல்களால் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகள் சூழ்ந்துள்ள தற்போதைய நிலையில் எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க காத்திரமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் நாமும் எமது வாழ்விடங்களில் உள்ள நிலங்களை பயிர்ச் செய்கை மற்றும் நீர்வேளாண்மைக்கும், ஏனைய வளங்களை பொருளாதார தேடலுக்கான வாய்ப்பாகவும் பயன்படுத்தி சுய பொருளாதாரத்தில் எமது மக்களை தலை நிமிரச் செய்யும் முயற்களை அயராது முன்னெடுத்து வருகின்றேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், சுயநலன் சார்ந்த தரப்புக்களின் தூண்டுதல்களுக்கு விலைபோனவர்களினாலும் எனது அயராத முயற்சிகளுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர வேண்டும் என்றும் மக்கள் நலப் பணிகள் எவ்வகையிலேனும் தடுத்து நிறுத்தப்பட்டுவிட வேண்டும் என்றும் தீய எண்ணங் கொண்ட அசூரர்களை காலம் கணக்கு தீர்க்கும் என்பதே தீபாவளிப் பண்டிகை எடுத்தியம்பும் வரலாற்று பாடமாகும்.

நரகாசூரன் அழிக்கப்பட்ட தீபத்திருநாளைக் கொண்டாடும் உங்களின் நம்பிக்கையை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம் என்ற மகிழ்ச்சியில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். – 23.10.2022

Related posts:

தொழிற்துறைகளை செயற்படுத்துவதன் மூலம் முல்லைதீவு மாவட்ட வறுமையைப் போக்க இயலும்! - டக்ளஸ் தேவானந்தா
வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...