மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தியதாகவே ஒவ்வொருவரது செயற்பாடுகளும் அமையவேண்டும் – தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 15th, 2018

யுத்தத்தை எதிர்கொண்டு அதனால் அதிகளவு பாதிக்கப்பட்ட மக்கள் முன்னாள் போராளிகள் என உதவிகள் தேவையுடையவர்கள் அதிகளவாக இம்மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் இம் மக்களது வாழ்வியலில் ஒரு நிரந்தரமான முன்னேற்றத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது. அந்தவகையில் இம்மாவட்ட மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தியதாக எமது கட்சியின் உழைப்புக்கள் ஒவ்வொன்றும் அமையப்பெற வேண்டும்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாலர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கான சிறப்பு சந்திப்பு ஒன்று இன்று கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் வை.தவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது செயற்பாட்டாளர்களுடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை எமது கட்சியூடாக வழங்கியுள்ளோம். இதனை மக்களும் நன்கறிவார்கள். தற்போது எமது  கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர்  தவநாதன் அவர்கள் எமது கட்சியின் ஒரு மாகாண சபை உறுப்பினராக இருப்பதனால் அவரும் தன்னால் இயன்றவரை மக்களுக்கான உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். இருந்தும் இம்மாவட்டத்தில் எமது செயற்பாடுகள் இன்னும் வலுப்பெற்ற நாம் மேலும் அதிகமாக உழைக்க வேண்டிய தேவைப்பாடுகள்  உள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் முன்னாள் போராளிகளும் அதிக தேவையுடையவர்களாக இருப்பதை நாங்கள் அறிவோம். எனவே இவற்றுக்கெல்லாம் விடிவை ஏற்படுத்தவேண்டியதும் அதற்கான அயராத உழைப்பும் அவசியமானது. எமது கட்சியினது கொள்கையை ஏற்று எம்முடன் இணைந்து உழைக்க வருபவர்களை ஒன்றிணைத்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாகவே நாம் சிறந்த  இலக்கை அடைய முடியும்  என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாட்டின் இன்றைய அரசியல் போக்கு ஒரு ஸ்திரமற்ற நிலையிலேயே செல்கிறது. இதன் காரணமாகவே மாகாணசபை தேர்தலை கூட  அரசு பிற்போட்டு வருகிறது. சிலவேளைகளில் மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்த்தல் ஒன்று நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்  மற்றும்  பச்சிலைப்பள்ளி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் வட்டாரங்களின் நிர்வாகச் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts: