கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு – அமைச்சர் டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு!
Saturday, November 4th, 2023
இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் 3 ற்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதீயாக கலந்து கொண்ட கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் ஆகியோர் தமிழர் கலாச்சார நிகழ்வுகளுடன் பிரதம மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இலங்கை அதிபர் சேவை தரம் 3 ற்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 401 பேருக்கான நியமனங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


