கொச்சினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறவுகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Wednesday, August 21st, 2024

பேருவளையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடந்த மேமாதம் 15 ஆம் திகதி இந்திய கரையோர காவற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொச்சினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களை  விடுவிக்க உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு  உதவுமாறு நேற்று (20) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அமைச்சர், தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

000

Related posts:

ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களின் மாடமாளி கைகளுக்கென அறவிடப்படு கின்றனவ...
இம்பசிட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
'யாழ் ராணி' சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி - சிறப்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...