வடக்கு கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஏற்பாடு!

Tuesday, November 27th, 2018

பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களது தலைமையில் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் உயர்மட்ட மகாநாடொன்று இன்று மாலை பிரதமர் செயலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி மகாநாட்டில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்த அமரவீர, விஜித்; விஜயமுனி; டி சொய்சா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் தென்பகுதியிலிருந்து வருகை தந்திருந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் இதன்போது தாங்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் மற்றும் தடைகள் தொடர்பில் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடயங்களை முன்வைத்திருந்தார்.

மேற்படி மகாநாட்டின்போது, கடற்றொழிலாளர்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டதுடன், வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் அமைச்சர்களான மகிந்த அமரவீர, விஜித் விஜயமுனி டி சொய்சா ஆகியோர் கலந்துரையாடி தீர்வுகளை எடுப்பார்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: