ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களின் மாடமாளி கைகளுக்கென அறவிடப்படு கின்றனவா ?

Wednesday, November 15th, 2017

ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள், செல்வந்தர்களின் மாட மாளிகைகளுக்கென அறவிடப்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பனை ஏறி தங்களது வாழ்க்கையில் பசி போக்க உழைக்கும் தொழிலாளியின் வியர்வையில் அறவிடத் துடிக்கும் வரிகள், 300 கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்கின்ற தென்பகுதி மதுபான உற்பத்திச் சாலைகளில் இருந்து  அறவிடப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

திரைப்பட மாளிகைகளில் அறவிடப்படுகின்ற கேளிக்கை வரிகள், குளிரூட்டப்பட்ட கசினோ சூதாட்ட விடுதிகளில் அறவிடப்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்த வேண்டும்…

இருப்பவர்களுக்கு வரிச் சலுகைகள், வரி இடை நிறுத்தல்கள், வரி ஏய்ப்பிற்கான வசதிகள் – இல்லாதோருக்கு எதற்கெடுத்தாலும் வரிகள் என இருக்கக் கூடாது.

இல்லாதோரின் வீட்டு அடுப்புகள் எரிவது, அவர்களது வயிறு எரியாத சில சமயங்களில் மாத்திரம்தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்! இவை எல்லாம் எனது ஆதங்கம் மட்டுல்ல! எமது மக்களின் யதார்த்தமும்தான் என்றார்.

Untitled-7 copy

Related posts:

நாட்டில் தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளன – நாடாளுமன்றில் டக்ளஸ...
‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்...
நல்லிணக்கம் என்றால் நல்லிணக்கம், கடும்போக்கு என்றால் கடும்போக்கு : இது நானும் பிரபாகரனும் மஹிந்தவிடம...