வடக்கின் வைத்தியசாலைகள் வளங்களற்று நலிந்து கிடக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, September 7th, 2018

தெல்லிப்ளை புற்றுநோய் மருத்துவமனையை எடுத்துக் கொண்டால் அது வெகுவிரைவில் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சமே எமது மக்களிடத்தே தற்போது எழுந்துள்ளது. உரிய மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் போதிய வசதிகளின்மை காரணமாக இந்த மருத்துவமனைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவே தெரிய வருகின்றது. எனவே இந்த மருத்துவமனையினை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமானால் அது மிகவும் உகந்த செய்றபாடாகவே இருக்கும் எனக் கருதப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் 2015ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரச் சபைச் சட்டத்தின் கீழான கட்டளை கணக்காய்வாளர் திணைக்கள உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் மற்றும் பெண் நோயியல் சிற்ப்பு மருத்துவ நிபுணர் இல்லாமல் பொது மக்கள் போராட்டம் நடத்துகின்ற நிலை அண்மையில் உருவாகியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையானது கிளிநொச்சி மற்றும் முல்லைத்திவு மாவட்டத்தின் ஒரு பகுதி என சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவப் பயன்களை அளித்து வருகின்ற நிலையில் இடவசதிகள் போதாமல் உள்ளன. இந்த மருத்துவமனைக்கான இரண்டாம் கட்ட கட்டடப் பணிகள் இதுவரையில் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக பொது மருத்துவம் சத்திரசிகிச்சை பெண் நோயியல் உளநலம் கண் மற்றும்  தோல் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றிக்கான விடுதி வசதிகள் இன்றிய நிலையே காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பின்தங்கிய மருத்துவமனைகள் அனைத்துமே மிகுந்த குறைபாடுகளுடனேயே செயற்பட்டு வருகின்றன.

பொது மக்களின் நலன்சார்ந்த எந்தத் துறைகளையுமே கவனிக்காத வடக்கு மாகாண சபை இந்த சுகாதாரத் துறையினையும் கவினிக்காத நிலையில் வடக்கில் சுகாதாரத் தேவைகளுக்காக அலல்ல்படுகின்ற மக்களின் குறைகளை யாரிடம் போய் சொல்வது என்ற நிலையே இன்று உருவாகியுள்ளது.

Related posts:

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம் - நாடாளும...
அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக்...