கேப்பாபுலவு மக்களுக்கு ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை – சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 7th, 2017

கேப்பாப்புலவு மக்களின் சொந்த, காணி நிலங்களுக்கான போராட்டம் 10 மாதங்களைக் கடந்தும் தொடர்கின்றது. படைகளுக்கு கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இன்று, நாளை, நாளை மறுநாள் விடுவிக்கப்படுமென்றுக் கூறப்பட்டது. இன்னும் நடந்தது ஒன்றுமில்லை – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் நாட்டில் 107 முகாம்களில் சுமார் 62 ஆயிரம் பேர் வரையில் எமது மக்கள் அகதிகளாகத் தங்கியிருக்கின்றனர். அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நம்பிக்கைத் தரும் ஏற்பாடுகள் இல்லை.

யாழ்ப்பாணத்தில் வசித்தவருகின்ற முஸ்லிம் மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத் திட்ட நிபந்தனைகளே தடையாக இருப்பதாக யாழ் மாவட்டச் செயலாளர்தெரிவிக்கின்றார்.

இப்படியே எமது மக்களது நிலைமைகள் அடிப்படைப் பிரச்சினைகளுடனும், தேவைகளுடனும் தொடரும் நிலைமையே காணப்படுகின்றது. அந்த வகையில், கௌரவ அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. எனினும், அவரது முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனைய தமிழ்த் தரப்பினரும் அவரை விமர்சனம் செய்வதில் மாத்திரமே குறியாக இருக்காமல், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வர வேண்டும்.

Untitled-2 copy

Related posts:

எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிர...
தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாள...
வெளிநாட்டு பல்கலை பட்டதாரிகளின் மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுற...