கிளிநொச்சி அறிவியல் நகரில் பொறியியல் பீடம் அமைந்தது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சியாலாகும்!

Friday, June 8th, 2018

கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் தமது பட்டப்படிப்பை தொடரப்போகும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

பேராசியர் துரைராசா அவர்களின் கனவாக முன்வைக்கப்பட்ட கிளிநொச்சியில் பொறியியல் பீடக் கனவானது கோரிக்கையாகவும், சிலரின் அரசியல் கோ~மாகவுமே இருந்து வந்தது. கிளிநொச்சியில் பொறியியல் பீடமொன்றை ஏற்படுத்துவதற்கு அர்த்தபூர்வமான எவ்விதமான நடவடிக்கையையும் எவரும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் 2009 ஆண்டு மே மாதம் நாட்டில் நடைபெற்ற அழிவு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்திருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துடன் பொறியியல் பீடத்தையும் இணைத்து ஆரம்பிப்பதற்கான கோரிக்கையை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திலும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் அமைச்சராக இருந்த கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்து வந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இந்த முயற்சிக்கு அப்போது யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த வசந்தி அரசரெட்ணம் அவர்களும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அந்த அறிவியல் நகரானது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பு என்றும், அங்கே விடுதலைப் புலிகள் தமது பயிற்சி முகாம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறியவந்த படையினர் அங்கிருந்து வெளியேற முடியாது என்றும், அறிவியல் நகரை தமது படைத்தளப் பிரதேசமாக வைத்திருக்கப்போவதாகவும் கூறிவந்தனர்.

தமிழ் மக்களின் சொந்தக் காணி நிலங்களிலும், பொதுப் பாவனைக்கு உரிய காணி நிலங்களிலும் படையினர் தொடர்ந்தும் இருப்பது பொறுத்தமாக இருக்காது என்றும், மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து படையினர் வெளியேறி அவர்களுக்குப் பொறுத்தமான பிரதேசங்களுக்கு செல்லவேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது படையினர் விசனமடைந்தனர்.\

அப்போதிருந்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்கள் அறிவியல் நகரை மீட்டுத் தருவதாகயாழ்ப்பாணத்தில் கூறிவிட்டு,கொழும்பு சென்றபோதும் அவரது கோரிக்கையும் அங்கு நிராகரிக்கப்பட்டது.

அறிவியல் நகரை விடுவிக்க முடியாது என்பதில் படையினர் பிடிவாதமாக இருந்த போதும் அறிவியல் நகரை மீட்டெடுத்து அங்கே யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தையும், பொறியில் பீடத்தையும் நிறுவும் தனது போராட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைவிடாமல்,பல தடவைகளுக்கு மேல் இந்தக் கோரிக்கை உள்ளடங்கிய கோவைகளுடன் ஜனாதிபதியின் அலரி மாளிகையின் வாசல்படி ஏறி இறங்கினார்.

மனம் தளராமலும், சோர்ந்து போகாமலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக 2011 ஆண்டு ஜூன் 6ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரத்தை பாவனைக்குத் திறந்து வைக்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த மேடையில் உரையாற்றும்போது,“ இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பல கோரிக்கைகளுடன் நாளாந்தம் என்னைச் சந்திக்கின்றார். அதில் ஒரு கோரிக்கையாக கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவியல் நகரை விடுவித்து அங்கே யாழ். பல்கலையின் விவசாய பீடத்தையும், பொறியியல் பீடத்தையும் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றார். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அறிவியல் நகரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்னும் மூடைக்கணக்கில் மக்களுக்கான கோரிக்கைகளுடன் இருக்கின்றார் அந்தக் கோரிக்கைகளையும் நான் நிறைவேற்றிக் கொடுப்பேன்” என்று வாக்குறுதி வழங்கினார்.

ஜனாதிபதி அவ்வாறு வாக்குறுதி வழங்கினாலும் காலம் தாமதிக்கவிடாமல் முயற்சித்து படையினர் அங்கிருந்து வெளியேறும்வரை அதைக் கண்காணித்து, தனது கட்சித் தோழர்களையும், ஆதரவாளர்களையும் அனுப்பி சிரமதானம் செய்து அங்கே விவசாய பீடமும், பொறியியல் பீடமும் ஆரம்பிக்கப்படுவதற்கு தேவையான வளங்களையும், வசதிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொடுத்தார்.

இதுபோல் யுத்த அழிவின் சிதறல்களாக இருந்த யாழ் குடாநாட்டையும், வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகளையும், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து தேவைகளையும் மீண்டும் ஏற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அர்த்தபூர்வமாகவும், அர்ப்பணிப்போடும் செயலாற்றினார். அவ்வாறு இல்லாவிட்டால்,தீர்வு கிடைக்கும்வரை அபிவிருத்தியும் வேண்டாம், மீள் குடியேற்றமும் வேண்டாம், வேலை வாய்ப்புகளும், வேண்டாம்,வீதியும், வேண்டாம்,போக்குவரத்து வசதிகளும் வேண்டாம், அழிவுகள் அவ்வாறே இருக்கட்டும் என்று வாய்ச்சவாடல் கூறிவருகின்றவர்கள் விரும்பியவாறே யாழ். குடாநாடு காட்சியளித்திருக்கும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

எமது மக்கள் சார்பில் அரசியல் தலைமை ஏற்பவர்களே எமது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கவும்,தாயக பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் முன் நின்று உழைக்க வேண்டும். அந்தக் கடமையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரத்திற்கு ஏற்றவாறும், தனது முயற்சியினாலும் சிறப்பாக செய்து முடித்தார். 2015 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து ஆட்சியில் தொடராமல் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இருப்பதால் கடந்த மூன்றரை வருடங்களாக அபிவிருத்திச் செயற்பாடுகளும்,மீள் கட்டுமானப் பணிகளும் ஸ்தம்பித நிலையை அல்லது ஒருவரை மந்த நிலைமையை அடைந்துள்ளதாக மக்களே வெளிப்படையாக கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது.

கடந்த 30 வருடங்களாக இனி சாத்தியமில்லை என்றே பலராலும் கைவிடப்பட்டிருந்தது. அந்தக் கனவை கடும் பிரயத்தனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து நனவாக்கிய வரலாற்று நாயகன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை சில மனிதர்கள் மறந்தாலும், வரலாறு மறக்காது.

ஆனாலும் போலித் தமிழ்த் தேசியம் பேசும் குள்ளநரிகளும், அரசியல் காழ்ப்புனர்ச்சியாலும், ஆற்றாத வெஞ்சத்தினாலும், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பையும், வரலாற்றுச் சாதனையையும் சில வி~மிகள் மூடி மறைக்க முயற்சிக்கின்றார்கள்.
பாவ பூமியாகக் கிடந்த அறிவியல் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பாதங்கள் பட்டபோதே விமோசனம் கிடைத்தது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தோழர்களின் வியர்வை விழுந்தபோதே அறிவியல் நகர் ஆக்கத்திற்கான பூமியாக புது அவதாரம் பெற்றது.

பேராசியர் துரைராசா விதைத்ததை பாதுகாத்து, வளர்த்தெடுத்து இன்று பெரு விருட்சமாக்கிய பெருமைக்குரிய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா என்றால் அது மிகையில்லை. அந்த விருட்சத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எமது மாணவமணிகள் மிளிர வேண்டும். சிறந்த பொறியியலாளர்களை எமது தாயக மண் இந்த உலகுக்குத் தரவேண்டும் என்பதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் உளமார்ந்த விருப்பமாகும்.

Kokavil Tower Opening (7)

Related posts:

வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளது வாழ்வியல் பாரபட்சமின்றி மேம்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்ற...
புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதி மொழியை அடுத்து டிக்கோவிற்ற கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவி...