குருநகர் கடல்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் அவசர சந்திப்பு!
Sunday, June 23rd, 2024
யாழ், குருநகர் கடல்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பு அமைச்சரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் யாழ் பண்ணை கடல் பிரதேசத்தில் அதிகளவில் கடலட்டை பண்ணைகள் அமைத்து தொழில் முயற்சிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடும் போது ஏற்படும் தொழில் சார் பிரச்சினைகள் மற்றும் தமக்கான தொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்து ஆராய்ந்த பின்னர் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவதாக தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பு யாழ் குருநகர் கடல்றொழிலளர் சங்க தலைவர் திரு பிரேமன் சகாயராசாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


