துரையப்பா விளையாட்டரங்கம் திறந்துவைப்பு

Saturday, June 18th, 2016

இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து திறந்துவைத்துள்ளனர்.

யாழ். நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்ட குறித்த மைதானம் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக விளையாட்டு ஆர்வலர்களின் பயன்பாட்டிற்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சியின் பயனாக இந்திய அரசியன் நிதி ஒதுக்குதல் மூலம் புனரமைக்கப்பட்டு இன்றையதினம் யழ்ப்பாணத்தின் விளையாட்டு ஆர்வலர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் நிதியுதவியுடன் 7 கோடி ரூபாய் செலவில் குறித்த மைதானம் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி புது டில்லியில் இருந்து video conferencing மூலமும் கூட்டாக மைதானத்தை திறந்து வைத்திருந்தனர்.

4

3

2

 6

Untitled-1 copy

Related posts:

தீர்மானங்களை நிறைவேற்றுவது முக்கியமல்ல: அவற்றை செயற்படுத்துவதே முக்கியமானது -  டக்ளஸ் தேவானந்தா!
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கவும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா...
அன்பும் அறமும் எங்கும் நிலவட்டும்! புதிய யுகம் நோக்கி புத்தாண்டு மலரட்டும்!! - வாழ்த்துச் செய்தியில்...

வேலணை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறக்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த் தரப்பினருக்கும் எத...
முழுமைபெறாதுள்ள சாவகச்சேரி திடீர் விபத்து பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுத்து தருமா...