எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சாதித்துக் காட்டுவேன் – வவுனியாவில் டக்ளஸ் எம்பி!

Monday, September 2nd, 2019

பாரபட்சமற்ற வகையில் வவுனியா மாவட்ட மக்களின் எதிர்கால வாழ்வியல் சூழ்நிலையை மாற்றமடைய செய்ய என்னால் முடியும். அதற்கான ஆதரவுப் பலத்தை மக்கள் இம்முறை தருவார்களேயானால் வரவுள்ள அரசின் ஆட்சிக்காலத்தில் எமது மக்களின் அபிலாசைகளை மிக விரைவில் நிறைவுசெய்து காட்டுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்தின் நிர்வாக செயலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டு சமகால அரசியல் மற்றும் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் அரசியல் பிரதிநிதிகள் பலரால் பாரபட்சம் பார்க்கப்பட்டு பல உதவிகளை இழந்துள்ளதுடன் பல அசௌகரியங்களையும் சந்தித்து வந்தனர்.

ஆனால் நாம் அவ்வாறு எச்சந்தர்ப்பத்திலும் பாரபட்சம் காட்டியது கிஐயாது. அதுமட்டுமல்லாது எமது மக்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்திது அவர்களது அபிலசைகளை பெற்றுக்கொடுப்பதிலேயே அயராது உழைத்து வருகின்றோம்.
இவற்றை எல்லாம் நாம் மக்கள் எமக்கு வழங்கிய குறிப்பிட்ட அளவான அரசியல் அதிகாரங்களை கொண்டே சாதித்து காட்டியிருக்கின்றோம்.

நாம் தேர்தல் கலங்களில் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் தட்டிக்களித்தது கிடையாது. மக்களை ஏமாற்றியதும் கிடையாது. அதேபோல ஜதார்த்தத்துக்கப்பற்பட்ட விடயங்களை கூறியதும் கிடையாது.

கடந்தகாலங்களில் நாம் மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் நாம் மேற்கொண்ட பொரும் பணிகளே இதற்கு சான்றாகும்.

எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின் எமது மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு அதை சாதித்துக் காட்ட முடியும். அதற்கான நம்பிக்கையும் ஆழுமையும் எம்மிடம் .

இம்முறை நடைபொறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் மக்களின் நலனைக் கருதியே பொதுஜன பெரமுன கட்சி முன்னிறுத்திய வேட்பாளரை ஆதரிக்க முடிவுசெய்துள்ளோம்.

எமக்கு எம்மீது நம்பிக்கை உண்டு. நீங்கள் எம்மீது நம்பிக்கை வையுங்கள். என்னால் உங்களது அபிலாசைகளை நிச்சயம் வென்றுதர முடியும் என்றார்.

Related posts: