கிளிநொச்சி மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – காசோலைகளும் வழங்கிவைப்பு!

Sunday, November 21st, 2021

நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களை தெரிவு செய்து வாழ்வாதாரத்தினை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலைகள் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன.

பூநகரியில் அமைந்துள்ள தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட சுமார் 24  பயனாளர்களுக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதி 50 ஆயிரம் ரூபாய்கான காசோலை இன்னும் சில வாரங்களில் வழங்கப்படவுள்ளது.

இதன்போது பயனாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறித்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளவர்கள், இதனை சரியான முறையில் பயன்படுத்தி நீட்சியான பொருளாதார நன்மைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: