கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸின் தொடர்ச்சியான முயற்சியே காரணம் – யாழ். பல்கலை துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவிப்பு!

Friday, February 5th, 2021

கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்ச்சியான முயற்சிகளே காரணமாக இருந்தது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் பயனபாட்டில் இல்லாமல் இருந்த இந்த பிரதேசத்தை இராணுவத்திடம் இருந்து பெற்றுத் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோள் காரணமாக கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி அவர்களினால் விடுவிக்கப்பட்டதாகவும் யாழ். துணை வேந்தர் நினைவு படுத்தினார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்காக ஜப்பானிய நிதியுதவியில் அமைக்கப்பட்ட ஆராட்ச்சி மற்றும் பயிற்சிக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் மேற்குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

முன்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்ட கிளிநொச்சி யாழ். பல்கலைக் கழகத்தின் விவசாய பீடத்திற்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத் தொகுதியின் திறப்பு விழா நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:


விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க முடியு...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!