வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்கு முன்பிருந்த பல்வேறு தொழில் முயற்சிகள் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது. அரச கைத்தொழில் சார்ந்த முயற்சிகளைப் போன்றே அக்காலகட்டத்தில் தனியார் மற்றும் மனை சார்ந்த கைத்தொழிற் துறைகளும் போதிய வளர்ச்சியினை எமது பகுதிகளில் கொண்டிருந்தன. இன்று அவை அனைத்துமே மீளக் கட்டியெழுப்பப்படாத நிலையே காணப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் கைத்தொழில் வணிக அலுவல்கள் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் ௲

எமது நாட்டின் கைத்தொழிற்துறை சார்ந்த வளர்ச்சி தொடர்பில் இம்முறை வரவு ௲ செலவுத் திட்டத்தில் பல்வேறு ஏற்பாடுகள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலைமையானது எமது பகுதிகளில் பொருளாதார ஈட்டல்களையும் குறைத்துள்ளதுடன் வேலைவாய்ப்புகளுக்கும் அதிகம் வாய்ப்பளிக்காத நிலையினை ஏற்படுத்தி எமது மக்களை வறுமைக்குள் தள்ளிவிட்டுள்ளது.

எமது நாட்டில் வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர்இ நுகர்வுத் தளம் ௲ முதலீட்டுத் தளம் என்பவற்றில் போதியளவு மாற்றங்கள் ஏற்பட்டதும்இ அதனால் உருவான திடீர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு புறம் சுமார் 30 வருட காலங்கள் முடக்கப்பட்டிருந்த அத்தியாவசியத் தேவைகளுக்கான கேள்விகள் அதிகரித்தும் அதற்குப் புறம்பான ஏனைய பொருட்களுக்கான தேவையானது மிகைப்படுத்தப்பட்டதுமான ஒரு நுகர்வுத் தளம் வளர்ச்சி பெற்றிருந்தது.
நீண்ட காலமாக கவனத்தில் கொள்ளப்படாதிருந்த பௌதீக கட்டுமாணங்களின் மேம்பாடுகள் வெளி மாவட்டங்களுக்கான தரைப் போக்குவரத்து விஸ்தீரணம் பெற்றமை மின்சார வசதிகள் 24 மணி நேரமும் உறுதிபடுத்தப்பட்டமை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் போன்ற காரணிகள் இந்த நுகர்வுத் தளத்தை விஸ்தீரணப்படுத்துவனவாக அமைந்தன.

அதே நேரம் இழந்தவற்றை மீளச் சேகரித்துக் கொள்வதும் ஏனைய தேவைகளை ஈட்டிக் கொள்வதும் எமது நுகர்வோரின் எண்ணப்பாடாகவும் அமைந்திருந்தன. இதன் காரணமாக இந்த நுகர்வுத் தேவையை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகச் செய்கைகள் திடீர் வளர்ச்சி பெற ஆரம்பித்தன. இதில் அப் பகுதி வர்த்தகர்கள் நேரடியாகவும் அப்பகுதி சாராத வர்த்தகர்கள் மறைமுகமாக தமது விநியோகத் தளத்தை அப்பகுதி வர்த்தகர்கள் ஊடாகவும் மேற்கொண்டிருந்தனர். இதனூடாக இந்த இரண்டு தரப்பினரும் அங்கு வளர்ச்சி பெற்றிருந்த திடீர்ப் பொருளாதாரச் சந்தையின் பயன்களைப் பெற்று வந்தனர்.

எனினும் இந்த நுகர்வு அலையானது நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. இந்த நிலையில் நுகர்வுத் தேவைகளின் படிப்படியான வீழ்ச்சி காரணமாக எமது வர்த்தகப் பொருளாதாரமும் வீழ்ச்சி காண ஆரம்பித்து விட்டது.

இந்த வீழ்ச்சியானது தற்காலிகமானது என எதிர்பார்த்து ௲ அரச வங்கிகளின் ஊடாக கடன் பெற்றுஇ கையிருப்புகளை குறைவில் வைக்காது அதன் மிகைக் களஞ்சியத்தைப் பேணியவர்களும் இதற்கென அரச வங்கிகள் கடன்களை மறுத்த நிலையில் வேறு நிதி மூல நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று மிகையான வட்டியைச் செலுத்த இயலாது போனவர்களும் மேற்படி பொருளாதார வீழ்ச்சி மீள வளர்ச்சி பெறாத நிலையில் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்ட ஒரு நிலையே வடக்கு மாகாணத்தில் நிலைத்துக் காணப்படுகின்றது என்பதை இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

Related posts:

யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!
நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...

வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் - நா...
அதிகார துஸ்பிரயோகத்தை கண்டித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் வாழ்த்து!
நீண்டகால முயற்சி – தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது பயணிகள் கப்பல் - அமைச்சர்களான டக்ளஸ் தே...