கண்டாவளை பிரதேச மக்களுக்கு காணி அளிப்பு பத்திரங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, November 1st, 2023
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சுமார் 137 பயனாளர்களுக்கான காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இதுவரையில் சுமார் 600 மேற்பட்ட காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்க...
தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வடகடல் நிறுவன வலைத் தொழிற்சாலையை செயற்படுத்த எதிர்பார்ப்பு- ...
மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
|
|
|


