தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வடகடல் நிறுவன வலைத் தொழிற்சாலையை செயற்படுத்த எதிர்பார்ப்பு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 31st, 2022


….
வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களை கொண்டு தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடிய போது, மேற்கண்டவாறு தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தற்காலிகமாக 5 பணியாளர்களைக் கொண்ட  குழுவொன்றிற்கான விபரங்களை தருமாறும், அதனூடாக  தொழிற்சாலை செயற்பாடுகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

தோல்வியடைந்த அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ள நிலையில், கடந்த கால அரசாங்கத்தின் வினைத்திறன் அற்ற செயற்பாட்டினால் பின்னடைவை சந்தித்துள்ள  வடகடல் நிறுவனத்தினையும் அந்நிறுவனத்தின் பணியாளர்களையும் பங்குதாரர்களாக கொண்டு தனியார் முதலீட்டாளர்களை உள்ளீர்ப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – 31.08.2022

Related posts:


தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
இந்திய இழுவை வலைப் படகுகள் ஏற்படுத்தும் அழிவுகளுக்கு நட்டஈடு ஈடாகாது. - தடுத்து நிறுத்துமாறு அமைச்சர...