கடற்றொழில் அபிவிருத்திக்கு சவுதியின் ஒத்துழைப்பை பெற முயற்சி!
Thursday, April 27th, 2023
கடற்றொழில் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு் சவுதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (27.04.2023) வருகைதந்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னேற்றும் நோக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய பல்வேறு திட்ட முன்வைரைபுகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்தழைப்புக்களை சவுதி அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்...
நீர்கொழும்பு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு - களப்பு அபிவிருத்தியிலும் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!
மக்கள் வெற்றிகொள்ள ஈ.பி.டி.பியின் வெற்றியை உறுதி செய்யுங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|
இரணைதீவில் கடற்தொழில் மேற்கொள்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் ஆராய்வு...
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களு...
வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி நிலங்களில் துரித விவசாய நடவடிக்கை – ஒட்டகப்புலத்தில் அமைச்சர் டக்ள...


