நீர்கொழும்பு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு – களப்பு அபிவிருத்தியிலும் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!

Saturday, July 17th, 2021

நீர்கொழும்பு, முன்னக்கர மைதான விவகாரத்திற்கு விரைவில் நியாயமான தீர்வு காணப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பிற்கான விஜயத்தினை இன்று(17.07.2021) மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னக்கர எனப்படும் கிள்ளடித் தோட்ட மைதானம் மற்றும் களப்பு அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுப்பதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக நேரடியாக ஆராயந்தார்.

இதன்பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உறுதியளிக்கப்பட்டது .

இலங்கையின் நீளமான களப்பாக காணப்படும் நீர்கொழும்பு களப்பினை நம்பி சுமார் 2000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் செலவில் குறித்த களப்பினைப் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிகாகப்பட்டிருந்தது.

எனினும், முன்னக்கர என்று அழைக்கப்படும் கிள்ளடித் தோட்டப் பகுதியில் அமைந்திருக்கும் விளையாட்டு மைதானக் காணி, வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் உரிமை கோரப்பட்டு வருகின்ற நிலையில், பிரதேச மக்களுக்கும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் அசாதாரண சூழல் காணப்படுவதுடன் களப்பு அபிவிருத்திப் பணிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த விவகாரங்ளை நேரடியாக ஆராய்வதற்காக நீர்கொழும்பிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், குறித்த விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் கலந்துரையாடி நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வவுனியா வாழ் முஸ்லிம் மக்களது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் – அமைச்ச...
தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தரப்புகள் “இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைகின்ற ஞான சூனி...
கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...