இரணைதீவில் கடற்தொழில் மேற்கொள்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் ஆராய்வு!

Monday, November 25th, 2019

கிளிநொச்சி இரணைதீவில் மீன்பிடித்தல் மற்றும் கடல் அட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபடுவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இரணைமடு கடற்றொழில் சங்கப்பிரதிநிதிகளும் கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சின் அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குஉட்பட்ட இரணைதீவுபகுதியில் கடலட்டை நண்டு இறால் உள்ளடங்களாக கடலுணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கான பண்ணைகளை அமைப்பதற்கும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள இரணைமாதாநகர் துறைமுக அபிவிருத்திப் பணிகளை துரிதகதியில் மீள ஆரம்பிப்பதற்கும் இப்பகுதி கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான கடற்றொழில் உபகரணங்களை வழங்குவதற்கும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தஅவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இரணைதீவு பகுதியில் இருந்து அப்பகுதி மக்கள் இடம் பெயர்ந்திருந்த நிலையில் அம்மக்களுக்கு கடலுணவு உற்பத்தித் திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. தற்போது இம்மக்கள் இரணைதீவு பகுதியில் மீளக் குடியேறியுள்ளதில் இரணைதீவு பகுதியில் இம்மக்கள் மேற்படி கடலுணவு உற்பத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏற்ப அப்பகுதியினை துரிதகதியில் ஆய்வு செய்வதற்கும் அதன் பின்னர் திட்டங்களை துரிதமாக மேற்கொள்வதற்குமான பணிப்புரைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில்
அமைச்சருடன் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கிளி - முல்லை மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியைகள் விடயம் அவர்களின் விருப்பின் பேரில் கையாளப்பட வேண்...
பனை தென்னை வளம் சார் உற்பத்திகளை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்க...
மீன் ஏற்றுமதி வருமானம் முறையாக நாட்டிற்கு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவான...