யாழ் – கிளிநொச்சி மாவட்ட மக்களின் பூர்வீக நிலங்களுக்களுக்கு இடையூறு – துறைசார் அமைச்சுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!ப்

Thursday, June 8th, 2023


…….
நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில், வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் வேலைத் திட்டங்கள்  கடற்றொழில் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் பூர்வீக வாழ்விடங்களுக்கும் விவசாய நிலங்களுக்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவைதொடர்பாக  துறைசார் அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி சுமூகமான தீர்வினை காண்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்

இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நக்டா நிறுவனத்தின் தலைவர் உட்பட்ட அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் காணி தொடர்பான மேலதிக அரசாங்க அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். –  08.06.2023

Related posts:


அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் - ஊடக சந்திப...
அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது - அமைச்சர் தேவா நம்பிக்கை!
படகு கட்டும் தொழிற்சாலையில் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!