கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, November 13th, 2022

கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு வழங்க அப்பகுதி பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கபோவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சந்தர்ப்பத்தினை தற்போதுள்ள தமிழ்த் தலைவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தாமும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அம...
தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...