ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022

தென் இலங்கையைச் சேர்ந்த சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் தலைவர்கள் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரை சந்தித்து மண்ணெண்ணெய் இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.

அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நன்றாக அறிந்துள்ளதாகவும் பல வழிகளில் கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான டீசல்,பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் எனபவற்றை விஷேட ஏற்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்களை மேற்கொண்டிருப்பாதவும் தெரிவித்தார்.

மேலும், ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

000

Related posts:

பனங்கள் உற்பத்தி தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் -  ச...
13ஆவதுதிருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திலிருந்து ஆரம்பிப்பதே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை...
நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது அரசின் கடப்பாடாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!