பனங்கள் உற்பத்தி தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, March 23rd, 2018

பனங் கள் உற்பத்தி தொடர்பில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும். எமது மக்கள் தங்கு தடைகளின்றி மேற்படித் தொழிலை மேற்கொள்வதற்கான வழிவகைள் உறுதி;ப்படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதுடன், பனை வளம் சார்ந்த தொழிற்துறையினை மேலும் மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் மதுவரி தொடர்பிலான விஷேட சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

தென்னை மரங்கள் கள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையிலும், இயற்கை தென்னை வளமற்ற செயற்கை கள் உற்பத்திகளே மிகவும் அதிகளவில் சந்தையில் இருப்பதாகவும், இவ்வகை கள் உற்பத்திகள் அதிகத் தீங்கினை ஏற்படுத்தக் கூடியன என்றும், இவ்வகை உற்பத்திகள் குறிப்பாக மலையகப் பகுதிகளில் மக்களுக்கு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, எவ்விதமான செயற்கை கலப்புகளுமின்றி, எமது மக்கள் பல வருடகாலமாக கூட்டுறவு அமைப்பில்  இயங்கிய நிலையில் இத் தொழிற்துறையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுவும், மதுவரித் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எமது மக்களின் பழைமைமிக்க தொழிற்துறையான பனை கள் உற்பத்தி சார்ந்து இத்தகையதொரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவது எந்தவகையில் நியாயமானதாகும? ; என்ற கேள்வியே எழுகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், பனங் கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்கள் தனியார்த்துறை சார்ந்து மேற்படித் தொழிற்துறையை மேற்கொள்வதில்லை. இத் தொழிலாளர்கள் கூட்டுறவு அடிப்படையிலேயே இத் தொழிற்துறையினை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஈட்டப்படுகின்ற வருமானங்களில் கணிசமான பகுதி ஏனைய மக்களது நலன்புரி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, இதனை ஒரு தனியார்த்துறை துறை சார்ந்த உற்பத்தி என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்பதையும் இந்தச் சபையிலே வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:


டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன் - இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!
புதிய ஆண்டில் நல்ல தீர்வு கிடைக்கும் - நம்பிக்கையுடன் பணிகளை தொடருங்கள் – நியமனம் கிடைக்காத டெங்கு ...
டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ள...