ஒரு வித்தியாசமான அரசியல்வாதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – டெய்லிமிரர் பத்திரிகை!

Tuesday, February 11th, 2020

நமது நாட்டில் கண்ணியமான கொள்கைகளைப் பேணும் ஒரு சில அரசியலாளர்களேனும் உள்ளனர் என்னும் விடயம் பலருக்கு ஒரு மகிழ்ச்சிதருவதாக அமையும்.

நாம் இங்கு எடுத்துக்கூறுவதற்கு முன்வருவது நாட்டின் தொலைவிலுள்ள மாவட்டம் ஒன்றிலிருந்து வரும் அரசியல்வாதி ஒருவரைப் பற்றியதே. ஒரு கட்சித’ தலைவரான இவர் தற்பொழுது உச்சநிலை அணியொன்றின் உறுப்பினராவார். 

அவரது சொந்த பிரதேசத்தில் உள்ள அரசியல் மதிப்புநிலையை கணிப்பில் எடுத்துக்கொண்ட பசுமை அணியின் பெருந்தலைவர்கள் மிகுகவர்ச்சி மிக்க வெகுமதிகளை முன்வைத்து பேரத்தில் இறங்கியிருந்தனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளிய அவர், மொட்டுடன் அதன் ஏற்ற இறக்கங்களில் கட்டுண்டவராகவே இருந்துள்ளார்.

மொட்டுக் கட்சியினர் புதிய அரசாங்கத்தை அமைத்தவேளை இவருக்கு உயர்மட்டத்து கேந்திரமான பதவியொன்று வழங்கப்பட்டது. அரசியல்வாதிகள் பலருக்கு உயர் பதவிகள் கிடைத்ததுமே அவர்கள் சொகுசு வாகனங்கள், ஆடம்பர உத்தியோகபூர்வ வதிவிடங்களை தயங்காது நாடுவர். ஆனால் இவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனமோ ஒரு வாரம்வரையான காலப்பகுதியில் இயந்திரக் கோளாறினால் பழுதடைந்து விடவே தனக்கு சொந்தமான வேன் ஒன்றிலேயே பயணங்களை மேற்கொண்டார். தனது உயர்மட்ட சகாக்கள் அதிசொகுசு வாகனங்களில் சுற்றிவரும் நிலையில் இவர் மட்டும் அரச பணிகள் நிமித்தமும், தனிப்பட்ட தேவைகளுக்காகவூம் குறித்த வேன் ஒன்றினையே பயன்படுத்துவது பேசு பொருளாகியுள்ளது.

சட்டமுறையல்லாத சலுகைகளினைக் கோரி பரிசுப் பொருட்களுடன் அவரை நாடுபவர்கள் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர் என்று பேசப்படுகின்றது. அத்தகைய வேண்டுகோள்களை முன்வைப்பவர்களுக்கெல்லாம் அவர் கூறும் ஒரே பதில் “நான் ஒரு ஏழை என்பது உண்மையே. ஆனால் கொள்கைகள் விடயத்தில் நான் ஓர் செல்வந்தன்”.

தவிர்க்க முடியாத மரணப்பொறிகளில் பல தடவைகள் அகப்பட்டு மீண்டவரான இவர் மொட்டுத் தலைவரை “ஐயா (அண்ணா)” என்று விழித்துரைக்கும் ஒரேயொரு உச்சநிலை அணி உறுப்பினராவார். 

Daily http://Daily Mirror – 5th February, 2020, Wednesday Mirror – 5th February, 2020, Wednesday

Related posts:


அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்களின் தடை பட்டியல் மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வலி...
எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள கடற்றொழிலாளர்களுக்கு புதிய திட்டம் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!