மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, October 30th, 2023

மக்கள் தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மறவன்புலவு மேற்கு சிதம்பர சித்தி விநாயகர் ஆலயம், பரிபாலன சபையினரால்  பூட்டப்பட்டுள்ளமை  தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு  பிரதேச மக்களினால் கொண்டு வரப்பட்டிருந்தது.

குறித்த விவகாரத்தினை  சுமுகமாக தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. 

இதன்போது, சம்மந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், ஒரு வார காலத்தினுள்  ஆலய பரிபாலன சபையினருடன் கலந்துரையாடி பிரதேச மக்கள் விரும்பிய நேரத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரி...
ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் - அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நில...

இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் - நாடாளுமன்றில் செயலாள...
அழிந்த வாழைகழுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜ...
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் ப...