ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் போதுதான் ஊர்காவற்றுறை பிரதேசத்தை வழங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றியமைக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வியல் மேம்பாடு தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது தான் ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியை மட்டுமல்லாது மக்களின் வாழ்வியலிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் கடந்த காலங்களில் தாம் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பயன்களை கருத்திற் கொண்டே உள்ளூhட்சி சபை தேர்தலின் போது எமக்கு வாக்களித்து எம்மை வெற்றி பெறச்செய்தார்கள்.
எனவே இந்த மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிச்சயம் நாம் நிறைவேற்றவோம். குறிப்பாக குடிநீர், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, உள்ளிட்ட மக்களிற்கு தேவையான விடயங்கள் தொடர்பிலே உரிய கவனம் செலுத்தப்பட்டு அவற்றிற்கான தீர்வுகளையும் பெற்றத்தருவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.
அந்த வகையில், இந்த பிரதேசத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதற்கு மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக்கொண்டு கிடைக்கப்பெற்ற பிரதேச சபையின் அதிகாரத்தின் ஊடாக இப்பிரதேசத்தை வழங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு நாம் முழமையான அர்ப்பணிப்போடு உழைப்போம்.
அத்துடன் ஊர்காவற்றுறை பிரதேசத்தை மட்டுமல்லாது தீவகத்தின் வேலணை, நெடுந்தீவு, பிரதேசங்களையும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதே எமது அபிலாசை ஆகும் எனவும் சுட்டிக்காட்டினார்.