ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு – பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு!

Tuesday, June 25th, 2024

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு கொழு்ம்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று (25.06.2024) இடம்பெற்றது.

இதன்போது கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தமிழ் பொது வேட்பாளர் விடயங்கள் தொடர்பிலும் இருவருக்கிடையே கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

அதிகரித்திருக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை ,தொடரும் கைதுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், உதவிப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை - இந்தியா நாடுகள் கைகோர்த்...
யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று - அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் ட...