ஐ. ஓ. எம். பிரதிநிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Tuesday, September 8th, 2020

பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை இணைக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். 

பலநாள் மீன்பிடிக் கலங்களில் ஆழ்கடலுக்குச் செல்லும் மீன்பிடியாளர்கள் நாடுகளுக்கிடையேயான எல்லைகளைத் தாண்டுவதும், இயற்கை அனர்த்தங்களால் திசைமாறி ச் செல்வதும் கடற்றொழிலாளர்களுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன.

அதேவேளை கடல்வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் கடற்கலங்களை கண்காணிக்கும் உபகரணங்கள் உதவும் என்றும் தெறிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த உபகரணங்களை கடற்றொழில் அமைச்சு பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஐ. எம். ஓ. நிறுவனம் வழங்கும்  உதவிகளுக்கு தனது நன்றிகளையும் ஐ. எம். ஓ. பிரதிநிதிகளிடம் தெறிவித்தார்.

Related posts:


பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் - நீதி அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் வேண்டுகோள்!
ஜே. வி. பி தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொட...
கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் - பன்னங்கண்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்...