காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதனூடாக வடக்கில் தொழிவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் – டக்ளஸ் எம்.பி!

Friday, March 9th, 2018

காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கென இந்திய அரசு முன்வந்துள்ள நிலையில், இந்தத் துறைமுகம் அபிவிருத்தி செய்து முடிக்கப்படுகின்ற தறுவாயில் காங்கேசன்துறை துறைமுகம் மூலமாக இந்தியாவிலிருந்து நேரடியாகப் பொருட்களை இறக்க முடியும் என்பதுடன் எமது பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதோடு பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக் கொடுக்க முடியும். எனவே, இது தொடர்பில்ஆராயுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான கட்டளைகள், தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில் –

இந்தியாவிலிருந்து இலங்கைக்கான உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஏனைய பல்வேறு வகையிலான பொருட்கள் கப்பல் மூலமாக கொழும்புத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்தக் கப்பல் போக்குவரத்தானது கடல் பாதையில் அதிகத் தூரத்தைக் கொண்டதாக இருக்கின்றமையால், மிகவும் இலகுவானதும், குறுகியதுமான கடல் பாதையாக காங்கேசன்துறை துறைமுகத்தைப் பயன்படுத்த முடியும். இது மிகவும் இலாபகரமான வழியுமாகும் என்றே நான் கருதுகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அறிக்கை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்ட...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயன...

ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற   செயற்பாடுகளை முன்னெடுப்போம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் ...
பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிட...