ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதி!
Saturday, June 27th, 2020
நம்பிக்கையோடு காத்திருங்கள் ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
மாவை கலட்டி பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினராக இருந்த அமரர் ஐயாதுரை அவர்களை அமைச்சர் நினைவு கூர்ந்து கருத்துரைக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
இப்பகுதி மக்கள் எமது கட்சியை பலப்படுத்தும் சக்தியாக திகழ்பவர்கள். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தவர்கள் என்ற வகையில் இப்பகுதிக்கு எமது சேவைகள் முக்கியத்தவம் பெறுகின்றன.
அமரர் ஐயாதுரை அவர்கள் இப்பகுதிக்கும் மக்களுக்கும் செய்த சேவைகள் மட்டுமல்லாது அவர் மேலும் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த கனவுகள் அனைத்தையும் நாம் ஈடேற்றி காட்டுவோம் என்றார்.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தட்டிக்கழிக்கப்படுகின்றதா? - டக்ளஸ் தேவானந்தா
தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப...
அதிகாரங்கள் போதியளவில் இன்மையால் மக்கள் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுகின்றது - அமைச்ச...
|
|
|


