எழுத்துக்களை விட எனது வெளிப்படையான வார்த்தைகள் வலுவானவை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, February 3rd, 2022

கடந்த காலங்களில் எழுத்து மூலமான உத்தரவாதங்களினால் எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எழுத்துக்களைவிட தன்னுடைய வெளிப்படையான வார்த்தைகள் வலுவானவை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கடற்றொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்பதாக இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். அத்துமீறும் இந்திய படகுகளை கைப்பற்றக் கோரியும், உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யதார்த்தத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் –டக்ளஸ் தேவானந்தா
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் க...
நீர்வேளாண்மை உற்பத்திகளை அதிகரிக்க பொருத்தமான இடங்களை ஆய்வு செய்து அடையாளப்படுத்துமாறு துறைசார் அதிக...

இராஜதந்திர பணிகளில் தமிழர் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்...
எத்தகைய சவால்கள் ஏற்படினும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள்:- திணைக்களங்களின் பிரதானிகளுக்க...
வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு - ஜனாதிபதி ரணிலுக்கு வடக்கு கடற்றொழிலாளர் சார்ப...