யதார்த்தத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் –டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 16th, 2016

மக்களுக்கு உண்மையானதும் நியாயமானதுமான கருத்துக்களினூடாக யதார்த்தத்தை தெளிவுபடுத்த வேண்டியது கட்சி உறுப்பினர்களதும் ஆதரவாளர்களினதும் பிரதான கடமையாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் யாழ்.மாவட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏனையவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது குறித்து ஆராயவோ அல்லது சிந்திக்கவோ முயலாது எமது கட்சியின் வளர்ச்சியை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கில் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும்.

நடைபெற்று முடிந்த கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எமக்கு மேலும் ஒரு உந்துசக்தியையும் புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பெருந்திரளாக கலந்துகொண்டிருந்த மக்களுக்கும் எமது கட்சியின்பாலான ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும்.

இந்நிலையில் மக்கள் உண்மை நிலவரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம்காட்டி வருவது மட்டுமன்றி தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கியவர்கள் அவற்றை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்ற மத்திய மாநில அரசுகளில் அதிகாரங்களுடன் இருக்கும் அரசியல் தலைமைகள் தொடர்பில் தமது விசனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

viber image

கடந்த காலங்களில் நாம் ஆட்சி அதிகாரத்தில் பங்காளிகளாக இருந்தபோது முடியுமானவரையில் மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உண்மையோடும் வெளிப்படைத் தனமையேடும் உழைத்திருக்கின்றோம்.

கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தாம் சார்ந்துவாழும் பகுதிகளின் அபிவிருத்திகளையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு செயற்படும் விதமாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்போடு உழைக்கவேண்டும். இவ்வாறான உழைப்பினூடாகவே அந்தந்த பகுதி மக்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மேம்பாடடைய முடியும்.

அந்த வகையில்தான் மக்களுக்கு உண்மையானதும் நியாயமானதுமான கருத்துக்களினூடாக யதார்த்தத்தை தெளிவுபடுத்தக்கூடியதாக கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மக்கள் மத்தியில் கருத்துக்களை கொண்டு செல்வதற்கு ஒன்றிணைந்து உழைக்கவேண்டியது அவசியமானதென்றும் தெரிவித்தார்.

இதனிடையே அபிவிருத்தி, அரசியலுரிமை, தேசிய நல்லிணக்கம் என்பதன் அடிப்படையில் தேசியக்கூட்டில் இணைந்து கட்சி செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை நிலைப்பாட்டில் பயணிப்பதாக தெரிவித்த அதேவேளை சிறிய கட்சிகள் பொது அமைப்புகள் மத நிறுவனங்கள் உள்ளிட்டவற்றினூடாக எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நிலைப்பாட்டிலேயே பிராந்தியக்கூட்டில் நாம் இணைந்துகொண்டுள்ளோம் என்றும் தெளிவுபடுத்தினார்.

viber image n

Related posts: