எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும்: அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கோரிக்கை!

Thursday, November 30th, 2017

கௌரவ அமைச்சர் சரத் பொன்செக்கா அவர்கள் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவில்லை என்றே கருதுகின்றேன். அவர் யாழ் குடாநாட்டிற்கோ வடக்கு மாகாணத்திற்கோ பரிச்சயமற்றவர் அல்லர். அவர் அங்கு  சில நாள் விஜயத்தினை மேற்கொண்டு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அவர்மீது எமது மக்களுக்கு அன்பு இருக்கின்றது. அதனை எமது மக்கள் அவருக்கு ஏற்கனவே தேர்தல் மூலமாக உணர்த்தியிருக்கின்றார்கள். அந்த வகையில் அவர் அங்கு வந்து முன்னாள் இயக்க உறுப்பினர்கள் மீள்குடியேறியுள்ள மக்கள் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்ட்டுள்ள மக்கள் தங்களது சொந்த காணி நிலங்களுக்காகப் போராடுகின்ற மக்கள் என அனைவரையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன். என ஈம க்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் அழைப்பு விடுத்துள்ளார்

இன்றைய தினம் பிராந்திய அபிவிருத்தி அபிவிருத்திப் பணிப் பொறுப்பு  நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

மேலும். தற்போதைய நிலையில் எமது நாட்டில் அபிவிருத்தி தொடர்பில் பல அமைச்சுக்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும் நடைமுறையில் காணக்கூடியதான அபிவிருத்திகள் இன்றிய நிலையே காணப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பணிக்கென ஒதுக்கப்படுகின்ற நிதியானது வேறொரு பணிக்கு மாற்றப்படுகின்ற நிலைமைகளும் பொருத்தமற்ற காலப் பகுதிகளிலும் இறுதி நேரத்திலும் சில பணிகளுக்கு என நிதி ஒதுக்கீடுகள் மேற்ககாள்ளப்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. பிராந்திய அபிவிருத்திகள் மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவனவாகவும் அதே நேரம் மக்களின் உயர் விழுமியங்களை உறுதி செய்வதாகவும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

Untitled-2 copy

Related posts: