எமது பயணத்திற்கு மக்களும் பக்கபலமாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020

பதவி ஆசைக்கான உசுப்பேற்றல்களுக்கும் ஜதார்த்தமற்ற சிந்தனைகளுக்கும் எடுபடாமல் மக்கள் படுகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு தீர்வைக்காணும் முயற்சிகளை மேற்கொள்ளும் எமது பயணத்திற்கு மக்களும் பக்கபலமாக இருந்து அரியல் அதிகாரங்களை தரவேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

விசுவமடு வள்ளுவர்புரம் பகுதி மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பிரச்சினைகள் மற்றும் தேவைப்படுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் –

எமது மக்கள் நீடித்த நிலையான தீர்வுகளை இதுவரை அடைய முடியாதிருப்பதற்கு தமிழ் மக்களது அரசியல் தெரிவுகளே காரணமாகியிருக்கின்றது.


காரணம் எமது மக்களை கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தேசியம் என்ற போர்வைக்குள் வைத்து தமது நாற்காலி ஆசைகளை நிறைவேற்றி வந்திருக்கின்றனர்.

இதர தமிழ் அரசியல்வதிகள் வாக்குகளை அபகரிப்பதற்காக முன்னெடுக்கும் பழிவாங்கல் உணர்வுளை நாம் கைவிட்டு எதிர்காலம் நோக்கியதாகதான முன்னெடுப்புகளை முன்நெடுக்க வேண்டும் நாம் முயற்சிக்க வேண்டும்.

நாம் எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தியே ஒவ்வொரு அரியல் செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றோம்

அதற்கான அரசியல் பலம் எமக்கு கிடைக்குமானால் வெகு விரைவில் அதிகமன பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எம்மால் பெற்றுத்தர முடியும் என கூறிய அமைச்சர் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேம்சும் என்றார்.

Related posts:

வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்...
செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் - பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும...

தொழிலுக்கான தடையை நீக்கித் தாருங்கள் - முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!
நிறுவனமும் சூழலும் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் - குருநகர் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைச்...
சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் - பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க மு...